"90s கிட்ஸ் மழைக்காலம்"
"வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் உள்ள பள்ளி கால்லூரிகளுக்கு நாளை விடுமுறை " னு 7 மணி செய்தியில சொன்ன உடனே நம்ம ஊரு பேரும் அதுல இருக்கானு பார்க்கிறது ல ஆரம்பிக்கும் எங்க 90s கிட்ஸ் ஓட மழைக்காலம் !.....
வெளிய வந்து பார்த்தா கருப்பா மட்டுமே இருந்து மழையே வராம இழுத்தடிக்கிற மேகத்தை திட்றதுல ஆரம்பிச்சு ,
26 ருப்பாய்க்கு போட்ட மெசேஜ் கார்டு ல
1100 நோக்கியா போன் டிங் -டிங் னு கத்தும், பார்த்தா
" டேய் மாப்ள நம்மளுக்கும் ஸ்கூல் லீவ் விடுவாங்களா டா" னு பசங்களுக்குள்ள பேசிக்கிறது வரை
ஒரு கிரைம் திரில்லர் படம் பார்த்த பீல் இருக்கும் 10 மணி வரை....
சாப்ட்டும் சாப்பிடாம , அன்னைக்கு குடுத்த ஹோம் ஒர்க்கயும் முடிக்காம, 10 மணி வரை டிவி முன்னாடி உட்கார்ந்த நம்மை " டேய் சாப்ட்டு போய் படுடா " னு அம்மா திட்றப்ப "அட சே நமக்கு மட்டும் ஏன் லீவ் விட மாற்றங்களோ" னு கடவுள திட்றதுல போய் முடியும் அந்த கிரைம் திரில்லர் பீல் ......
மறுநாள் காலைல நல்ல குளிருல
இழுத்து போட்டு தூங்கிட்டு இருக்கிறப்ப,
நல்லா சூடா காபிய வச்சிட்டு
எந்திரிடா னு அம்மா சொல்ல,
அந்த அக்டோபர் மாச குளிருல காலைல காபி குடிச்சிட்டே வெளியில பெய்யிற மழைய ரசிக்கிறப்ப வர்ற பீல் இருக்கே, இப்பயும் "சே நம்ம ரொம்ப மிஸ் பன்றோம் ல " னு சொல்ற விசயத்துல டாப் 5 ல அது ஒன்னா இருக்கும் ....
சரி எப்படியாவது லீவ் போற்றலாம்னு காய்ச்சல் னு அம்மா கிட்ட ஆக்ட்டிங் போடலாம்னு பார்த்தா !
அவங்க நம்மள விட விவரமா கழுத்தை தொட்டு பார்த்திட்டு " அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலியே " னு சுடு தண்ணிய நாலு கப் தலையில ஊத்தி, நம்மள ரெடி பண்ணி ஸ்கூல் பேக்க மாட்டி விடுறப்ப
"என்னைக்கும் இல்லாம அவ்ளோ கனமா இருக்கும்' ....
நம்ம ஊரும் கடலோரம் இருந்திருக்க கூடாதா ?
லீவ் விட்ருக்க கூடாதா? னு மனசு ஏங்கும்....
ஸ்கூல் லைப் முடிச்சு ஒரு 10 வருஷம் ஆச்சு , மழைக்கு ஸ்கூல்க் கு லீவ் னு இன்னைக்கு காலைல நியூஸ் பார்த்ததும் , "மழை கு ஆபிஸ்க்கெல்லாம் லீவு விட மாட்டாங்களா பாஸ்? "னு நம்ம மனசு ஓரத்துல ஒரு பீல் வரும் பாருங்க ... அதான் எங்க 90s கிட்ஸ் ஓட மழைக்காலம் !
- சூரியப்பிரகாஷ்
0 Comments